Sunday 30 August 2015




இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள சில சட்டங்கள் எந்த நாட்டிலிருந்து  எடுக்கப்பட்டது என்பதை பாப்போம்

  1. அடிப்படை உரிமைகள்                -     USA
  2. நீதி புனராய்வு                         -     USA
  3. அடிப்படை கடைமைகள்             -     USSR(ரஷ்யா)
  4. அரசு நெறிமுறை கோட்பாடுகள்    -     அயர்லாந்து
  5. அவசரநிலை பிரகடனம்              -     ஜெர்மனி
  6. கூட்டாச்சி முறை                     -     கனடா
  7. பாராளுமன்ற ஆட்சிமுறை           -     இங்லாந்து
  8. சட்டத்தின் ஆட்சி                     -     இங்லாந்து
  9. அதிகார போதுபட்டியல்              -     ஆஸ்திரேலியா
  10. அரசியல் சட்ட திருத்தமுறை        -     தென் ஆப்பிரிக்கா
  11. ராஜ்யசபா நியமன எம். பி.க்கள்     -     அயர்லாந்து

  

Friday 28 August 2015

வணக்கம் நண்பர்களே : TNPSC GROUP-I ,TNPSC GROUP- II,TNPSC GROUP-IV & VAO தேர்விற்கு பயனுள்ளதாக அமையும் அனைத்து நண்பர்களும் படித்து பகிருங்கள் : இந்திய அரசியல் அமைப்பு உருவான வரலாறு 



இந்திய அரசியலமைப்புச்சட்டம் உருவான வரலாறு

-     வீ.உதயகுமார்


இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். சிலருக்கு அப்படி ஒன்று இருப்பதே தெரியாது. நாம் இந்தியர்கள் என்ற உரிமையை அளிப்பதே இந்த அரசியல் சட்டம் தான். எல்லா குடிமக்களும் அரசியல் சட்டத்தை முழுமையாக படிக்கவேண்டும் என்று அவசியமில்லை. ஆனால், அதை பற்றி கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும். அமெரிக்காவில் பாருங்கள், கிண்டர் கார்டனிலிருந்தே அவர்களுடைய அரசியல் சட்டத்தைப்பற்றி சொல்லிக்கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இந்தியாவில் யாராவது இப்படி செய்திருக்கிறார்களா என்று கூட தெரியவில்லை.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒப்புதல் பெற்ற நாள் 1949 நவம்பர் 26. இச்சட்டம் அடுக்கடுக்காக பல பரிணாமங்களுக்கு பின்னரே முழுமையடைந்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அரசியல் சட்டத்துக்கு மிகப்பெரிய வரலாற்றுப்பின்னனியும், சிறப்புகளும் உண்டு. உலகிலேயே மிகப்பெரிய அல்லது மிக நீண்ட, எழுத்துப்பூர்வமான அரசியல் சட்டம் நம்முடையதுதான். 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தால் இது முறையாக ஏற்கப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடையும்போது அதற்கென்று தனி அரசியல் சட்டம் வேண்டும். அதற்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என பல தலைவர்கள் குறள் எழுப்பினர். அதைப்பற்றி காண்போம்.
இந்திய அரசியலமைப்புச்சட்டம் உருவாவதற்கான காரணங்கள்:
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா, அதற்கு அடுத்தபடியாக நமது நாடு இந்தியா தான். இந்தியா மதச்சார்பற்ற நாடு ஆகும். நமது நாட்டின் இந்திய அரசியல் அமைப்பு உருவான விதத்தைப் பற்றி காண்போம்.
இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதி 1857ஆம் ஆண்டின் சிப்பாய் கலகம் அல்லது முதல் இந்திய சுதந்திரப்போர் தொடங்கிய பிறகு 1858லிருந்து 1947 வரை ஆங்கிலேயர் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது.
ஒழுங்குமுறைச்சட்டம் 1773:
இந்திய விடுதலை போராட்டம் மற்றும் அரசியல் அமைப்பு உருவாக அடிப்படை காரணமான ஒழுங்குமுறைச்சட்டம் 1773ல் உருவாக்கப்பட்டது. வங்காள ஆளுனர் வங்காளத்தின் தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டார். வாரன் ஹேஸ்டிங்ஸ் முதல் தலைமை ஆளுநர் ஆனார். தலைமை ஆளுநருக்கு உதவி புரிய நான்கு உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. பம்பாய் மற்றும் மெட்ராஸ் ஆளுநர்கள் வங்காள தலைமை ஆளுநருக்கு கட்டுப்பட்டவர்கள் ஆனார்கள்.
கி.பி.1774ல் கொல்கத்தாவில் ஹூக்ளி நதிக்கரையில் உச்சநீதிமன்றம் உருவாக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் 1 தலைமை நீதிபதியும், 3 துணை நீதிபதிகளும் பதவி வகித்தனர். தற்போது, 2015ல் 1 தலைமை நீதிபதியும், 30 துணை நீதிபதிகளும் உள்ளனர்.
பிட் இந்தியச்சட்டம் 1784:
இச்சட்டம் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் அரசியல் நடவடிக்கைகளைப் பிரித்தது. நிர்வாகத்திற்காக இரண்டு விதமான குழுக்கள் அமைக்கப்பட்டன. அவை இயக்குனர் குழு மற்றும் கட்டுப்பாட்டுக்குழு.
இதனைத் தொடர்ந்து நான்கு விதமான பட்டையச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

பட்டையச்சட்டம் 1793 (முதல் பட்டையச்சட்டம்):–
இச்சட்டத்தின் படி இந்தியர்களுக்கு கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை.
பட்டையச்சட்டம் 1813 (இரண்டாம் பட்டையச்சட்டம்):–
இந்தியர்களின் கல்வி வளர்ச்சிக்காக ரூபாய் ஒரு இலட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த நிதி பயன்படுத்தவில்லை. ஏனெனில், இந்தியர்கள் கல்வியறிவு பெறுவதை ஆங்கிலேயர்கள் விரும்பவில்லை. இந்தியாவில் வாழும் ஐரோப்பியர் சமய நலன் காக்க கிறிஸ்துவ பேராயர்கள் நியமிக்கப்பட்டனர். ஆங்கில நாட்டு வியாபாரிகளுக்கும், மத போதகர்களுக்கும் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியோடு இந்தியாவில் வசிக்க அனுமதி வழங்கப்பட்டது.
பட்டையச்சட்டம் 1833 (மூன்றாம் பட்டையச்சட்டம்):–
ஆங்கிலேய கம்பெனியின் தனி உரிமை ஒழிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் தான் வங்காள கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் பிரபு இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றார்.
பட்டையச்சட்டம் 1853 (நான்காம் பட்டையச்சட்டம்):–
தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய 2௦ உறுப்பினர்கள் கொண்ட இயக்குனரவை 18 உறுப்பினர்களாகக் குறைத்து 6 பேர் ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்டனர். குடிமைப்பணிகளுக்கு இந்தியாவின் உறுப்பினர்கள் போட்டித்தேர்வின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மத்திய நிர்வாகத்தில் இந்தியர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். சட்ட உறுப்பினர் லால் மெக்காலே நிரந்தர உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இந்திய அரசாங்கச்சட்டம் 1858:
மாநிலங்களின் செயலாளர் என்ற கேபினெட் அமைச்சர் பதவி உருவாக்கப்பட்டது.
விக்டோரியா மகாராணி பேரறிக்கை:
1857ல் சிப்பாய் கலகத்தின் முடிவில் விக்டோரியா மகாராணியார் பேரறிக்கை வெளியிடப்பட்டது.
1858 நவம்பர் 1ஆம் நாள் அலகாபாத் நகரில் மாபெரும் பேரவை கூட்டப்பட்டது. அங்கு மகாராணியின் பேரறிக்கை வெளியிடப்பட்டது. இதனை இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலும், முதல் அரச பிரதிநிதியுமான கானிங் பிரபு வாசித்தார்.
பேரறிக்கையின் அம்சங்கள்:
கட்டுப்பாட்டுக்குழு மற்றும் நிர்வாகக்குழு கலைக்கப்பட்டன. இந்தியசெயலாளர் பதவியும் அவருக்கு உதவி செய்ய 15 பேர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டு இந்திய நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டது. நாடு இழக்கும் கொள்கை கைவிடப்பட்டது. கொலைக்குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்திய கவுன்சில் சட்டம் 1861:
வைசிராய் அவையில் ஐந்தாவதாக ஓர் உறுப்பினர் சேர்க்கப்பட்டார். கானிங் பிரபு பல்துறைப் பிரிவுகளை உருவாக்கினார். இந்தியர்கள் வைசிராய் செயற்குழுவில் இடம் பெறவில்லை. வைசிராய் அவசர சட்டம் வெளியிட அதிகாரம் பெற்றிருந்தார். அச்சட்டம் 6 மாதங்கள் வரை செல்லும். அனைத்து மாகாணங்களும் ஒரே பொதுவான முறைக்கு மாற்றப்பட்டது. சட்டமன்றம் உருவாக்கப்பட்டது.
இந்திய கவுன்சில் சட்டம் 1892:
இச்சட்டத்தில் சட்டமன்றத்தின் அதிகாரம் மற்றும் பணிகள் ஆகியவை வரையறுக்கப்பட்டன. முதல் முறையாக தேர்தல் கோட்பாடு பற்றி சிறிய அளவில் வலியுறுத்தப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இச்சட்டம் இயற்றப்பட்டது.
இந்திய கவுன்சில் சட்டம் 1909:
இந்தியர்களிடையே ஏற்பட்ட கொந்தளிப்பை கட்டுப்படுத்தவும், இந்திய புரட்சி இயக்கங்களின் ஆதரவை குறைக்கவும் இந்தியர்களுக்கு சில உரிமைகளை வழங்க வேண்டும் என காலனி அரசு முடிவு செய்தது.
இந்திய சட்டமன்றங்களுக்கு இந்திய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க  முதல்முறையாக தேர்தல் முறையை அறிமுகம் செய்தனர். இந்திய உறுப்பினர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டனர். இதில் இஸ்லாமியர்களுக்கு 25% தனி இடங்கள் ஒதுக்கப்பட்டன.
சத்யேந்திர சின்ஹா, வைசிராய் கவுன்சிலின் முதல் இந்தியர் ஆனார். அவர் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
இந்திய அரசுச்சட்டம் 1919:-
இச்சட்டம் இந்தியாவிற்கான உயர் ஆணையர் என்ற புதிய அலுவலர் பதவியை இலண்டனில் ஏற்படுத்தியது. முதல் உலகப்போரின் போது இந்தியர்கள் ஆங்கிலேயர்களுக்கு முழு ஆதரவு கொடுத்தனர். இதனால் ஆங்கிலேயர்கள் போரில் வெற்றி பெற்றனர். இதற்கு கைமாறாக 1919ஆம் ஆண்டு ஆங்கிலேய பாராளுமன்றம் மாண்டேகு-செமஸ்போர்ட்  சீர்திருத்தச் சட்டத்தை இயற்றியது.
இந்திய அரசுச்சட்டம் 1935:-
தற்போது நாம் பின்பற்றும் 75% அரசியலமைப்புச் சட்டங்கள் 1935ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டவையே.
இதன்படி மத்தியவங்கி உருவாக்கப்பட்டது. மேலும் உச்சநீதிமன்றம் அமைய வழிவகுத்தது.
இந்திய அரசுச்சட்டம் 1935ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டம் சைமன் குழுவின் அறிக்கை மற்றும் மூன்று வட்டமேசை மாநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இயற்றப்பட்டது. இச்சட்டம் பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. மாகாணங்களில் தன்னாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மாகாணங்களில் செயல்பட்டு வந்த இரட்டை ஆட்சி ஒழிக்கப்பட்டது.
இந்திய சுதந்திரச்சட்டம் 1947:-
பிப்ரவரி 20, 1947ல் பிரிட்டிஷ் பிரதம மந்திரி கிளமண்ட் அட்லி இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வருகிறதென்றும் அதன் அதிகாரம் போறுப்புள்ளவர்களிடம் அளிக்கப்படும் என்று அறிவித்தார். மவுண்ட்பேட்டன் பிரபு சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆனார். அவர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவிற்கு பதவிபிரமாணம் செய்துவைத்தார்.
தொடரும் 



Thursday 27 August 2015



TNPSCGROUP-I, TNPSGROUP-II,TNPSCGROUP-IV AND VAO  தேர்விற்கு தேவையானவை (27/08/2015)

இந்திய அரசியல் அமைப்பு (INDIAN CONSTITUTION)
1 . இந்திய குடியரசு தலைவர் – இந்திய அரசின் தலைவர்
2. இந்திய பிரதமர் –இந்திய அரசாங்கத்தின் தலைவர்
3. இந்தியா உலகிலே மிகப்பெரிய மக்களாட்சிநாடு ஆகும்
4.  மக்களாட்சி நாடுகள்: INDIA, USA,UK ..
5.    மன்னராட்சி நாடுகள் :28
6. உலகத்தில் மொத்த நாடுகள் :257(2015- ஆண்டின் படி ) உறுப்பு உரிமை நாடுகள் :192
7.அமெரிக்கா அதிபர் –அமெரிக்கா அரசு மற்றும் அரசாங்கத்தின் தலைவர்
8. இங்லாந்து  அரசி –இங்லாந்தின் அரசின் தலைவர்
9.இங்லாந்து பிரதமர் –இங்லாந்தின் அரசாங்கத்தின் தலைவர்
10.அதிபர் முறை அரசாங்கம் அமெரிக்காவில் நடைபெறுகிறது அரசு மற்றும் அரசாங்கத்தின் தலைவர் இவரே ஆவார்
11. உலகத்தில் பலமான மக்களாட்சி கொண்ட நாடு USA  ஆகும்
12.அதிபர் முறை அரசாங்கம் – பாரளுமன்றதைவிட பலம் வாய்ந்தவை
13. அரசு நிரந்தரமானது அரசாங்கம் மாறக்குடியது
14. இந்தியா & அமெரிக்கா குடியரசு நாடுகள் ஆகும்
15. ஜப்பான் & இங்க்லாந்து முடியரசு நாடுகள் ஆகும்
16. முடியரசு என்பது பாரம் பரிய மன்னர் / அரசி ஆளப்படுவது
17.அரசு மாறது, அரசாங்கம் மாறும்
18.சர்வதிகாரம் என்பது தனிமனிதரால் ஆளப்படுவது
19.இங்க்லாந்து அரசி –இங்க்லாந்து அரசின் தலைவர்
20.குடியரசு(Republic) - சாதாரண குடிமகன் :அரசின் தலைவர்