Monday, 30 November 2015

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

*
தினமும் நாம் காலையில் எழுந்ததும் என்ன செய்கிறோம்? பல் விளக்குகிறோம். காலைக் கடன்களை முடிக்கிறோம். அழுக்குப்போக குளிக்கிறோம். சிக்கெடுத்து தலை வாருகிறோம். மேற்பூச்சிகள் தனி. அப்புறம் உணவு உட்கொள்கிறோம். அவரவர் வசதி கேற்ப நடை பயிற்சி, யோகா, தியானம் என உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறோம். கொஞ்சம் உடல் நலம் கெட்டாலும் மருத்துவரிடம் ஓடுகிறோம். இப்படி எல்லாம் செய்யாவிட்டால் சீக்கிரமே சீக்காளியாகி இறந்துப்போவோம். சரி, நமக்கு உணவைக் கொடுப்பது யார்? உடலை வளர்ப்பது யார்? நீர்நிலைகள்தானே. அவை இல்லாவிட்டால் சூனியமாகிபோவோம். இன்றும் உயிரோடு இருக்கும் நமது பாட்டன், பூட்டன்கள்போலத்தான் இந்த நீர் நிலைகள் எல்லாம்.
ஆம், ஏரிகள், குளங்களுக்கும் உயிர் உண்டு. இது அறிவியல்பூர்வமான உண்மை. மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஏரி, குளங்களை அப்படிதான் வரையறுத்துள்ளது. ஏரிகள், குளங்கள் உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சியோடு ஒப்பிடப்படுகின்றன. அவை ஓர் உயிரினத்தைப் போல புவி யியல்ரீதியாக நிலப் பரப்புகளில் ஏற்படும் இயற்கை மாற்றங்களால் அல்லது மனிதனால் பிறக்கின்றன. காலப் போக்கில் உயிரினங்களைப் போலவே பல்வேறு வடிவங்களில் பரிணாம மாற் றங்களுடனும் பல்லுயிர் பெருக்கத் துடனும் வளர்கின்றன. அவை தங்க ளுக்கான உணவாக ஆறுகளில் அடித்து வரப்படும் வண்டலில் இருந்து வளத்தைப் பெறுகின்றன. அந்த வளத்தில் பாசிகள், நீர்த் தாவரங்கள், நீர் வாழ் உயிரினங்கள், நுண்ணுயிரிகளை வாழ வைக்கின்றன. எனவே, ஏரிகளும் குளங்களும் உயிரினங்களே என்கிறது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை. 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச ஏரிகள் சுற்றுச்சூழல் கமிட்டி ஜெய்ப்பூரில் நடத்திய 12-வது உலக ஏரிகள் மாநாட்டிலும் இது வலியுறுத்தப்பட்டது. இது ‘ஜெய்ப்பூர் பிரகடனம்’ என்றழைக்கப்படுகிறது.
ஆனால், நம் உடலை பராமரிப் பதைப் போல ஏரி, குளங்களைப் பரா மரிக்கிறோமா? நமக்கு தலைவாருவது போல ஏரியை தூர் வார வேண்டாமா? நம் உடலில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்வதைப்போல குளத்தில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டாமா? ஆகாயத் தாமரைகள் ஒன்றிரண்டாக வளரும்போது முளையி லேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டாமா? எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை எதிர் பார்க்கலாமா? அரசாங்கத்தை நடத்து வது அரசியல்வாதிகள்தானே. அவர் களா வந்து நீர் நிலைகளை சரிசெய்யப் போகிறார்கள். நீர் நிலைகளைப் பராமரிக்க ‘நமக்கு நாமே’ திட்டம் உட்பட எவ்வளவோ திட்டங்கள் இருக் கின்றன. மக்களாகிய நாமே... குறிப்பாக, விவசாயிகளே களம் இறங்கலாமே.
தமிழகத்தில் ஒவ்வொரு ஏரியின் எல்லைகளையும் குறைந்தது நான் கைந்து கிராமங்களாவது பங்குபோடு கின்றன. அந்தந்த கிராமங்களில் வேலையை ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு நாளும் சில மணி நேரம் ஒதுக்கி ஒவ் வொன்றாக செய்யலாம். மெதுவாய் குப்பைகளைப் பொறுக்குவோம். அப்புறம் ஆகாயத் தாமரைகளை அகற்று வோம். பெரியதாக எல்லாம் வேண்டாம். சின்ன சின்னதாய் செய்வோம். சிறுக சிறுக சேமிப்போம். சிறு துளி பெருவெள்ளம். சிறியதே அழகு. ஊர் கூடி தேர் இழுப்போம். காந்தியும் ஜே.சி.குமரப்பாவும் வலியுறுத்திய கிராமப் பொருளாதாரத் தத்துவம் இதுதானே.
இப்படி எல்லாம் செய்யாமல்தான் எத்தனையோ ஏரிகளை, குளங்களை, நதிகளை இருக்குமிடம் தெரியாமல் அழித்துவிட்டோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டை அருகே உள்ளது உப்பலோடை. இந்த ஓடை இருந்த இடம் தெரியாமல் காடு மாதிரி மண்டிக் கிடக்கிறது கருவேல மரங்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் இரண்டு நதிகளே எங்கே என்று தெரியவில்லை. திருநெல்வேலியில் இரண்டு முக்கூடல்கள் உண்டு. ஒன்று திருப்புடைமருதூர், இன் னொன்று சிவலப்பேரி முக்கூடல். ஒரு காலத்தில் திருப்புடைமருதூர் முக்கூட லில் கடனா நதி, வராக நதி, தாமிரபரணி மூன்றும் கலந்தன. அதனால்தான், அது முக்கூடல் என்று பெயர் பெற்றது. ஆனால், இப்போது மூன்று நதியில் வராக நதி எங்கே போனது? அது எங்கே இங்கே கலக்கிறது? ஒரு சிலர் கல்லிடைக்குறிச்சி சாலையில் இருக்கும் கடம்பை வழியாக ஓடிவந்து வெள்ளாளங்குடியின் கருணை கால் வாயில் (மஞ்சலாறு அல்லது எலுமிச்சையாறு) கலப்பது வராக நதியாக இருக்கலாம் என்கிறார்கள். இன்னொரு சாரார், ஆழ்வார்குறிச்சியில் கடனா நதியுடன் ராமா நதி கலக்கிறது. அது வராக நதியாக இருக்கலாம் என்கிறார்கள். இதுவரை தெளிவான விடை கிடைக்கவில்லை.
இன்னொரு முக்கூடல் 16-ம் நூற் றாண்டில் எம்நயினார் புலவர் முக்கூடற் பள்ளு பாடிய சீவலப்பேரி முக்கூடல். அந்தக் காலத்தில் ஏரி, குளங்களைப் பராமரித்த பள்ளர்களை சமூகம் ஒதுக்கி வைத்தது. ஆனால், வேளாண்மைக்கு ஆதாரமாகத் திகழ்ந்த பள்ளர்களைப் போற்றவே அழகர் பெருமாள் முக்கூடலுக்கு வந்தார் என்று சொல்லும் அருமையான படைப்பு முக்கூடற் பள்ளு. இங்கே மேற்குத் தொடர்ச்சி மலையின் பஞ்சந்தாங்கி பகுதியில் உற்பத்தியாகி குற்றாலம் அருவியாகக் கொட்டி, 14 அணைக்கட்டுகளை நிரப்பி தென்காசி, கங்கைகொண்டான் வழியாக சிவலப்பேரியில் தாமிரபரணியுடன் கலக்கிறது சிற்றாறு. இன்னொரு பக்கம் கழுகுமலை பகுதியில் இருந்து ராஜாபுதுகுடி, தலையால் நடந்தான் குளம், கங்கைக்கொண்டான் வழியாக கயத்தாறு இங்கே வந்துச் சேர்ந்தது. இவ்வாறாக தாமிரபரணி, சிற்றாறு, கயத்தாறு மூன்றும் சங்கமம் ஆனதால் மூக்கூடல் என்றழைக்கப்படுகிறது. ஆனால், இன்று அந்த கயத்தாறு எங்கே போனது?
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை அருகே உப்பலோடையில் மண்டிக்கிடக்கும் கருவேல மரங்கள். | படங்கள்: எம்.லட்சுமி அருண்
கங்கைக்கொண்டானில் இருந்து புளியம்பட்டி செல்லும் பாதையில் வடகரை கிராமத்தின் வடக்குப் பக்க மாக இருக்கிறது பராக்கிரம பாண்டி யன் குளம். இதன் மூலம் வடகரை, கிழக்கோட்டை, கைலாசபுரம், வேப்பங் குளம், கொடியங்குளம் உள்ளிட்ட கிராமங்கள் பாசனம் பெறுகின்றன. கழுகுமலையில் இருந்து ஓடிவரும் கயத்தாறு பராக்கிரம பாண்டியன் குளத்தில் இணைகிறது.
ஆனால், இந்தக் குளம் தூர் வாரப்படாமல் சீமை கருவேல மரங்களில் ஆக்கிரமிப்பில் தனது முழுக் கொள்ளளவை இழந்துவிட்டது. தண்ணீர் அடுத்தடுத்தக் குளங்களுக்குச் செல்லும் வாய்க்கால்களும் அழிக்கப் பட்டுவிட்டன. கயத்தாற்றின் ஓட்டமே குளத்துடன் நின்றுப்போனது. இதனால் அந்த ஆறு சிவலப்பேரி முக்கூடலில் சங்கமிக்காமல் பராக்கிரம பாண்டியன் குளத்திலேயே மூழ்கிவிட்டது.
இதனால், பெருமழைக் காலங்களில் கயத்தாற்றில் தண்ணீர் பெருகும்போது அது வேறு வழியில்லாமல் பராக்கிரம பாண்டியன் குளத்தில் இருந்து பின் வாங்கி வடகரை, புளியம்பட்டி, கங்கை கொண்டான் கிராமங்களை மூழ் கடிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு பெய்த மழையின்னபோதும் இப்படி தான் கங்கைக்கொண்டான் - புளியம் பட்டி இடையே இருக்கும் தரைப் பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் பாய்ந்தது. இருபக்கமும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு தவித்த மக்களை தீயணைப்புத் துறையினர் வந்து மீட்டனர். என்ன செய்வது? ஆற்றின் பாதையை அழித்த வினைக்கு அனு பவிக்கிறோம்.

Friday, 27 November 2015நொச்சியானது இந்தியா முழுவதும் பரவலாக வளரக்கூடிய ஒரு வெப்ப மண்டலத் தாவரமாகும். வெண்நொச்சி, கருநொச்சி, நீர்நொச்சி எனமூவகை நொச்சிகளை மருத்துவ நூல் உரைக்கிறது. அதிகமாகக் காணப்படுவது வெண்நொச்சியாகும். நீர் நிலைகளுக்கு அருகில் முக்கியமாக ஆற்றங்கரையோரம் நீர்நொச்சி வளர்கிறது. கருநொச்சி அதிகமாகக் காணப்படுவதில்லை. இங்கு வெண்நொச்சி பற்றிக் காணலாம்.
மருத்துவப் பயன்கள்

நொச்சி, நுனா, வேம்பு, பொடுதலை வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு அத்துடன் மிளகு 4, ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு 3 வேளை 3 நாளுக்குக் கொடுக்க மாந்தம் குணமாகும்.

நொச்சியிலை 1 கைப்பிடியளவு, மூக்கிரட்டை வேர், காக்கரட்டானி வேர் வகைக்கு 1/2 கைப்பிடியளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு அத்துடன் சுக்கு 1, மிளகும், சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து 1/2 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு தினமும் 2 வேளையாக, 1 வாரம் குடித்துவர தொடக்க நிலையில் உள்ள இளம் பிள்ளை வாதம் (போலியோ) குணமாகும்.

நொச்சி இலை 2, மிளகு 4, இலவங்கம் 1, சிறிய பூண்டுப் பல் 4 சேர்த்து வாயில் போட்டு மென்று விழுங்கினால் இரைப்பிருமல் (ஆஸ்துமா), மூச்சுத் திணறல் குணமாகும். தொடர்ந்து இப்படிச் செய்ய வேண்டும்.
சாலை ஓரங்களிலும் வேலிகளிலும் காணப்படும் நொச்சி இலைகள் பல நோய்களை விரட்டும் திறன் கொண்டது.
இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது. இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை என முழுத்தாவரமும் பயன்படுபவை.
கிராமப் புறங்களில் தானியங்களை சேமிக்கும் பொழுது நொச்சித் தழைகளை உடன் வைத்து விடுவர்.
மேலும் இது பூச்சிகள் வருவதை தடுக்கும்.
நொச்சி இலையின் மகத்துவங்கள்
மூக்கிலிருந்து நீர் ஒழுகுதல், ஜலதோஷத் தலைவலிக்கு கைகண்ட மருந்து நொச்சி தைலம்.
நொச்சி இலையில் ஒத்தடம் கொடுத்தால் வாயுப்பிடிப்பு, சுளுக்கு நீங்கும்.
நொச்சி இலைகளை ஒரு துணிப்பையில் அடைத்துப் தலையணையாகப் பயன்படுத்தினால் ஜலதோஷம் பறந்துவிடும்.
சீழ்பிடித்து அழுகிச் சொட்டும் புண்ணைக் கூட நொச்சி தைலத்தால் குணப்படுத்தலாம்.
தீராத வாதநோய் வலிப்பு குணமாக நொச்சி இலையுடன் பூண்டு, ரோஜா மொட்டு அல்லது காசினி விதைப்பூ சேர்த்த அரிசிக்கஞ்சியை குடிக்கலாம்.
இந்த இலைகளை நீரிலிட்டு காய்த்து குளித்து வர கீல் வாதம் மறையும்.
இந்த நொச்சி பூவின் சாறு அரை ஸ்பூன் எடுத்து, சம அளவு தேன் கலந்து உண்ண காய்ச்சல் குணமாகும்.
நொச்சி துவையல்
முதலில் வாணலியில் சிறிது எண்ணை விட்டு கடுகு போட்டு நொச்சி இலையை லேசாக வறுக்கவும்.
பிறகு இதனுடன் வெற்றிலை மிளகு மற்றும் மிளகாய் செடியின் இலையை அரைத்தால், நொச்சி இலை துவையல் ரெடி.
பயன்கள்
இந்த துவையலை தினமும் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குணமடையும்.
இதை முதுகில் பூசிக்கொண்டால், முதுகு வலி பறந்துவிடும்.
மேலும் சுவாஸ கோளாருகள் நீங்கி நல்ல அரோக்கியத்துடன் இருக்கலாம்.
நொச்சி கஷாயம்
நொச்சி இலை போட்டு ஊற வைத்த தண்ணீரைச் வாணலியல் வைத்து சிறிது மிளகு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்தால் நொச்சி கஷாயம் ரெடி.
பயன்கள்
இந்த கஷாயம் மலேரியா நோயை விரட்டும் சக்தி வாய்ந்தது.

நாக்குப்பூச்சி வாத நோய்கள் மற்றும் வயிற்றுவலி நீங்கும்.!!! 

Sunday, 22 November 2015

12 வயதில் குழைந்தை பெற்ற சிறுமி

உலகிலேயே மிக இளம் வயதில் குழந்தை பெற்றவர் தெரசா மிடில்டன் என்பவர் ஆவர் .இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவருக்கு இப்போது வயது 16.இவர் 11வயதில் கர்ப்பமானார். 2006- ம் ஆண்டு 12 வயதில் பெண் குழந்தைக்கு தாயர் ஆனார் . குழந்தை பிறந்ததும் , அது ஒரு குழந்தை இல்லாத பெற்றோரிடம் தத்து கொடுக்கப்பட்டது . அதை பார்பதற்கு அவர் அனுமதிக்கபடவில்லை .இதனால் மனம் நொந்து போன தெரசா போதைக்கு அடிமையனர். குடிப்பது போதை பொருள்களை புகைப்பது என்று வாழ்க்கைய நரகமாக்கி கொண்டார் .
 அவர் மைனர் என்பதால் எவர் புகைபடத்தை வெளியிட அந்த நாட்டு சட்டம் அனுமதிக்கவில்லை .அவருக்கு இப்போது 16வயதானதை தொடர்து அவரது புகைப்படம் வெளியிடுகிறோம் .அவர் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டபோது டீன்ஜ் சிறுவனோடு ஏற்பட்ட பழக்கத்தில் அவர் கர்ப்பமானார். அவர் 11 வயதில் கற்பமானதை அறிந்து இங்கிலாந்து நாடே அதிர்த்து போனது . " நடந்த சம்பவத்துக்கு வருந்தவில்லை . நான் பெரியவளான பெறகு என் குழந்தையை கேட்டு பெறுவேன்" என்கிறார் தெரேச .
ஒரு விவசாயி இடத்தை வாங்கும் முன், முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் தங்குவார்..
விடியற்காலையில் சேவல் வழக்கம்போல் கூவினால் மண்ணில் உசுருஇருக்குண்ணு அர்த்தம்.
கூவாவிட்டால் மண்ணில் சத்து இல்லைன்னு அர்த்தம்...
சேவல் நன்றாக கூவினால் மட்டுமே அந்த இடத்தை வாங்குவர்.. இதிலுள்ள முக்கியமான உண்மை என்னவென்றால் சேவல் மண்ணைக்கீர அதனுள் உள்ள புழுக்களை தின்று மறுநாள் தெம்பாகக்கூவும்.
தோண்டி புழு கிடைக்கவில்லை என்றால் அந்த கூவலின் ஆற்றலில் தெரிந்துவிடும். புழு அதிகம் இருக்கும் மண் விவசாயத்திற்கு ஏற்றது.
ஒரு விவசாய கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய விடவேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் .
அப்படி அவை படுக்கும் இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத் தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத் தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்...
அறிவியல் வளர்ந்து விட்டது எங்களால் எதையும் சாதிக்க முடியும்ன்னு சொல்லி மக்களை நோயாளியாக்கி அவன் உயிரை காப்பாற்ற அவனையே மிரட்டி காசு பறிப்பதுதான் உங்கள் உண்மையான அறிவியல் வளர்ச்சி.
ஆனால் இயற்கையை கடவுளாக பாவித்து வணங்கி இயற்கையோடு வாழும் மனிதன் உங்களுக்கு படிப்பறிவில்லாதவன்.
கற்றுக்கொள்ளுங்கள் இதுபோல் எங்கள் பாட்டன்,பூட்டன் இன்னும் ஒளித்து வைத்துள்ளான் பல விசயங்களை..
- தமிழர்கள்


Thursday, 19 November 2015

மழை நீர் பிராணன்-(சக்தி):சமஸ்கிருதம் வார்த்தை (பிராணன் )
 பிராணன் என்பது வாழ்க்கைக்கு தேவையான சக்தி ஆகும்
  பிராணன்  ஐந்து வகைப்படும்
பிராணன்
மேல் நோக்கிச் செல்வதும் மற்றும் மூக்கின் நுனியிலிருக்கும் வாயுவிற்குப் பிராணன் என்பர். 
அபானன்
கீழ் நோக்கிச் செல்லும் (நாபிக் கமலத்திலிருந்து) மற்றும் குதம் போன்ற இடங்களில் உள்ள வாயுவிற்கு அபானன் என்று பெயராகும். பிறப்புறுப்புக்களில் இவ்வாயு இருக்கும். நம் உடலில் கழிவுப் பொருட்கள் வெளியேற்றுவதற்கும் இந்த வாயுதான் காரணமாக உள்ளது.
வியானன்
உடலிருந்து எல்லாப் பக்கங்களிலிருந்து செல்கின்ற மற்றும் உடலில் எல்லாப் பக்கங்களிலும் உள்ள வாயுவிற்கு (உயிர்ச் சத்திற்கு) வியானன் என்று பெயர். `எது பிராணன் அபானன்களின் இடையே உள்ளதோ அது வியானன் எனும் வாயு ஆகும். அக்கினியை கடைதல், இலக்கை நோக்கிப் பாய்தல், உறுதியாக உள்ள வில்லை வளைத்தல் போன்ற மிகவும் முயற்சியுடன் செய்ய வேண்டியுள்ள வேறு செயல்களை மூச்சு விடாமல், மூச்சை இழுத்துக் கொள்ளாமல் செய்கிறான்` என  சாந்தோக்கிய உபநிடத்தில்    (சுலோகம் 1. 3. 3 மற்றும் 5) கூறப்பட்டுள்ளது.
உதானன்
மேல் நோக்கிச் செல்லும் மற்றும் வெளியிலும் செல்லும் தன்மையுடையது உதானன் எனும் வாயு. இது தொண்டையில் நிலை பெற்றுள்ளது. உடலைவிட்டு உயிர் பிரிந்து செல்லும் பொழுது உதவிபுரியும் (உயிர் சத்திற்கு) உதானன் என்று பெயர்.
மரணம் ஏற்படும் பொழுது சீவன் (உயிர்), உடலைவிட்டு வெளியேறுவதற்கு உத்கிரமணம் அல்லது உத்கிராந்தி என்று பெயராகும். சீவன் (உயிர்) கண் போன்ற எந்த துவாரத்தின் மூலமாகவும் வெளியேறலாம். இருப்பினும் தொண்டையானது பொதுவாக  சீவன்  (உயிர்) உடலை விட்டு வெளியேறும் இடமாக உள்ள
 சமானன்  
சமானன் எனும் இவ்வாயு உடலின் நடுப்பகுதியில் உள்ளது. உண்ட உணவையும் குடித்த நீர் போன்றவற்றை சமமாக்க் கலந்து உணவை செரிக்க வைக்க உதவும் இவ்வாயுவை சமானன் என்பர்.
மனம் - உறக்கம் - நரம்பியல் சார்ந்த மூளையின் இயக்கங்களில், பாதிப்பின்றிப் பணியாற்ற உதவும் சடாமாஞ்சில், வாலுளுவை, நீர்ப்பிரம்மி, சங்கு புஷ்பம் முதலான மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உண்டு.

மழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை, எனவே அவை ஆரோக்கியத்தை ஏற்ப்படுத்துகிறது என்று அர்த்தம். சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் இருக்கிறது. மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது, காய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்த பிராணனை உறிய ஆரம்பிக்கிறது. உடலில் பல நாட்களாக, பல வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல் வழியாகவும், சளியாகவும், மூக்கு ஒழுகுதல் வழியாகவும் வெளியேற்றுகிறது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்கிறானா, இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால், மழையில் நனைந்தால் அவனுக்கு சலிபிடிக்காமல்,காய்ச்சல் வராமல் இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள்.

எனவே, மழையில் நனைந்து காய்ச்சல் வந்தால் அதைப்பாரத்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. தைரியமாக இருங்கள். நமது உடல் நன்மை செய்கிறது. அது ஒரு மருத்துவம். எனவே யாருக்கு எந்த நோய் இருந்தாலும் மழையில் நனைவதன் மூலம் உடலை குணப்படுத்த மூடியும். மழைநீரை குடிப்பதின் மூலமாகவும் நமது உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்த மூடியும்.

மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து நிமிடம் அந்த நீரை குடிக்கக்கூடாது. ஏனென்றால் காற்றில் தூசுகளும், குப்பைகளும், வாகனங்களிலிருந்து வரும் கழிவுப்பொருள்களும் வானத்தில் இருக்கும். முதல் 5 நிமிடத்தில் மழைநீர் அந்த தூசுகள், குப்பைகளை எடித்துக்கொண்டு பூமியை நோக்கி வரும் எனவே முதல் 5 நிமிடத்தில் வரும் மழைநீரை நாம் குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்கு பின் வரும் மழைநீரை நேரடியாக பாத்திரத்தில் மூலமாகவோ, ஒரு கலனை பயன்படுத்தி அந்த நீரை பிடிக்கவேண்டும். ஒருவேளை நமது வீட்டின் கூரை சுத்தமாக இருந்தால் கூரையிலிருந்து வரும் மழைநீரையும் பிடிக்கலாம். இந்த நீர் உலகிலேயே மிகவும் சுத்தமான தூய்மையான நீர். இதில் பிராணன் அதிகமாக இருக்கும். இந்த தண்ணீரை ஒரு பாத்திரத்திலோ, ஒரு பாட்டிலிலோ காற்று புகாமல் அடைத்து சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டால் அந்தத் தண்ணீர் ஆறு வருடங்களுக்கு கெட்டுபோகாமல் இருக்கும். ஆனால் அந்த தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டுவிட்டால், 24 மணிநேரத்தில் அதில் புழு, புச்சிகள் வந்து அந்த நீர் கெட்டுவிடும். எனவே மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல் பாதுகாத்து அதை நாம் குடிக்கும்போது.நமது உடலுக்கு தேவையான அனைத்து பிராணனும் கிடைத்து, நமது உடலிலுள்ள அனைத்து நோய்களும் குணமாகி, நமது உடல் ஆரோக்கியம் அடைகிறது. எனவே, மழைநீர் பிராணனை நாம் பயன்படுத்துவோம்.

குழந்தைகள் மலையில் நனைவதை நாம் குற்றம் என்று கூறி விரட்டி அடிக்கவேண்டாம். மழையில் நனைவது மிகவும் அற்புதமான, அருமையான, சந்தோஷமான மனதிற்கு பிடித்தமான, பெரு நிகழ்ச்சி. மேலும் ஆரோக்கியமானதும் கூட. எனவே இனிமேல் மழை வரும்போது நம்மை ஒரு சினிமா நடிகைபோல் நினைத்துக்கொண்டு, அதில் ஆட்டம் போடலாம். நல்லது. மழைநீரை குடிக்கலாம் நல்லது. மழைநீர் பிராணன் ஒரு அற்புதமான மருந்து.

எனவே இனி நம் வாழ்வில் நீர் பிராணனை சேர்த்துக் கொள்வோம். நீர் என்பது சாதாரணம் கிடையாது. உயிர்சக்தி, நீர் பிராணன், நீரில் உள்ள பிராணனை நாம் சரியான முறையில் பயன்படுத்தி ஆரோக்கியமாக, அமைதியாக நிம்மதியாக வாழ்வோம்.வாழ்வோம் ஆரோக்கியமாக.