Tuesday 1 December 2015

TNPSC GROUP-II (மாதிரி வினா விடைகள் -தமிழ் இலக்கிய வரலாறு -1.12.2015)


பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது - தமிழ்
பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் - மதுரைக் காஞ்சி
பொருநராற்றுப்படையைப் பாடியவர் - முடத்தாமக் கண்ணியார்.
மலைபடுகடாம் என்னும் இலக்கியம் - கூத்தாற்றுப்படை
முல்லைப்பாட்டைப் பாடியவர் - நப்பூதனார்.
தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் - சிறுபாணாற்றுப்படை
உலா நூல்களுள் மிகப் பழமையைனது -  திருக்கைலாய ஞான உலா
  தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா
கலிங்கத்துப் பரணி பாட்டுடைத்தலைவன் - குலோத்துங்கன்
ஆண்பால் பிள்ளைத் தமிழின் இறுதி நான்கு பருவங்கள் - அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்
திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் - மாணிக்கவாசகர்
கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் - இரட்டைப் புலவர்
தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் - அழகர் குறவஞ்சி
  கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் - ஆண்டாள்
"நாமார்க்கும் குடியேல்லோம், நமனை அஞ்சோம்" என்று பாடியவர் - திருநாவுக்கரசர்
"பொய்கை ஆழ்வார்" பாடிய பக்திப் பாடல் தொகுதியின் பெயர் - முதல் திருவந்தாதி
"சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே" பாடியவர் - பொன்முடியார்
  திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்
பாஞ்ச சன்யம் - பொய்கையாழ்வார்
கருடாம்சம்    - பெரியாழ்வார்
சுதர்சனம் - திருமழிசை
களங்கம் -  திருமங்கையாழ்வார்
அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் - குலசேகரர்
சுந்தர் பாடிய திருத்தொண்டர் தொகை - தொண்டர் தம் பெருமை கூறும் நூல்
  பிள்ளைத் தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு - திவாகர நிகண்டு
குலோத்துங்க சோழனின் பிள்ளைத்தமிழ் பாடியவர் - ஒட்டக்கூத்தர்
பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் - திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்.
திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் - சமண சமயம்
சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் -  திருத்தக்கதேவர்
அறிவு அற்றம் காக்கும் கருவி - முப்பால்
செல்வம் சகடக் கால்போல் வரும் - நாலடியார்
சிறு மாலை கொல்லுனர் போல வரும் - ஐந்திணை எழுபது
காதலி மாட்டுள்ளம் வைப்பார்க்குத் துயிலில்லை - நான்மணிக்கடிகை
  ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் - இன்னா நாற்பது
இளமையை மூப்பு என்றுணர்தல் இனிதே - இனியவை நாற்பது
  புல் நுனிமேல் நீர் போல் நிலையாமை - நாலடியார்
  அகம் குன்றி மூக்கில் கரியாருடைத்து - முப்பால்
  முல்லையும் குறிஞ்சியும் நல்லியல்பு இழந்தால் பாலையாகும்
மருந்துப் பெயர் அல்லாத பதினெண் கீழ்க்கணக்கு நூல் - கைந்நிலை
தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா
  காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்: பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்
  நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறு நூறு, ஒத்தபதிற்றுபத்து
  அம்புலி, சிற்றில் சிறுபறை, சிறுதேர்
  காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி
மூன்று சீர்களாய் அமைவது - நேரிசை ஆசிரியப்பா
ஈற்றயலடி முச்சீராய் வருவது - நேரிசை ஆசிரியப்பா
  மூன்று சீர்களாய் அமைவது - நெடிலடி
  





குட்டிக் கந்தபுராணம் எனப்படுவது?
கந்தர் கலிவெண்பா

குட்டித் தொல்காப்பியம் எனப்படுவது?
இலக்கண விளக்கம்
குட்டித் திருவாசகம் எனப்படுவது?
திருக்கருவைப் பதிற்றுப் பத்தாந்தாதி
சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை எவ்வளவு? 96
   ஓரடியில் நீதியை உரைக்கும் நூல்கள் எவை?
ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை, முதுமொழிக்காஞ்சி
உலகநீதியின் ஆசிரியர் யார்?
உலகநாதர்
நீதிநெறி விளக்கத்தின் ஆசிரியர் யார்?
    குமரகுருபரர்
சிறுவயதிலேயே இறையருள் பெற்ற அருட்கவி யார்?
    குமரகுருபரர்
காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்தமான தமிழ்ப்பாட்டு எது?
    நீதி நெறிவிளக்கத்தில் இடம் பெறும் நீரில் குமிழி இளமை நிறைசெல்வம்.....எனத்தொடங்கும்  பாடல். தமிழகம் வந்த போது காந்தியடிகள் இப்பாடலில் இடம் பெறும்    “நீரில் எழுத்தாகும் யாக்கைவரியை தன் கைப்பட எழுதி மோ.க.காந்தி என தமிழில் தன் கையொப்பம் இட்டு கொடுத்துள்ளார்.
கற்பனைக் களஞ்சியம் எனப் போற்றப்படுபவர் யார்?
    சிவப்பிரகாசர்
  நன்னெறியின் ஆசிரியர் யார்?
    கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசர்

அறநெறிச்சாரத்தின் ஆசிரியர் யார்?
    முனைப்பாடியார் (சமணர்)

அருட்கலச்செப்பு எனும் நூலைப் பின்பற்றி எழுதப்பட்ட நூல் எது?
    அறநெறிச்சாரம்

 “ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்எனக்கூறியவர் யார்?
    நல்வழிப்பாடலில் ஒளவையார் கூறுகிறார்

நட்டான் என்பதன் பொருள் என்ன?
    நண்பன்
  
ஒளவையார் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்க நூல்கள் எவை?
    நீதிநூல்கள்: ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை (வாக்குண்டாம்) நல்வழி, கல்வியொழுக்கம்
    பக்தி  நூல் : விநாயகர் அகவல் 
    தத்துவ நூல் : ஒளவைக்குறள்

ஆத்திசூடி என்பதன் பொருள் என்ன?
    ஆத்திப்பூமாலையை சூடிய சிவபெருமான்
 வாக்குண்டாம் என அழைக்கப்படுவது?
    மூதுரை
 நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழி ஓடிப்
    புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - இவ்வரி இடம் நூல் எது?
    மூதுரை
  “பாலும் தெளித்தேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்
    “சங்கத் தமிழ் மூன்றும்தாஎனக் கூறியவர்?
    ஒளவையார் (நல்வழி)
  “ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக்கு ஏல் என்றால் ஏலாய்எனக்கூறியவர் யார்?
    நல்வழிப்பாடலில் ஒளவையார் கூறுகிறார்.

கல்வியொழுக்கத்தின் ஆசிரியர் யார்?
    ஒளவையார்
 அஞ்சு வயதில் ஆதியை ஓது
    ஊமை என்பவர் ஓதாதவரே
    ஏழை யென்பவர் எழுத்தறியாவர்
    கண்ணில்லாதவன் கல்லாதவனே
    தீரக் கற்றவன் தேசிகன் ஆவான்

கடல்கோளும் கரையானும் அழித்தது போக எஞ்சிய தமிழ்நூல்கள் எவை?

    சங்க நூல்கள்

Monday 30 November 2015

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

*
தினமும் நாம் காலையில் எழுந்ததும் என்ன செய்கிறோம்? பல் விளக்குகிறோம். காலைக் கடன்களை முடிக்கிறோம். அழுக்குப்போக குளிக்கிறோம். சிக்கெடுத்து தலை வாருகிறோம். மேற்பூச்சிகள் தனி. அப்புறம் உணவு உட்கொள்கிறோம். அவரவர் வசதி கேற்ப நடை பயிற்சி, யோகா, தியானம் என உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறோம். கொஞ்சம் உடல் நலம் கெட்டாலும் மருத்துவரிடம் ஓடுகிறோம். இப்படி எல்லாம் செய்யாவிட்டால் சீக்கிரமே சீக்காளியாகி இறந்துப்போவோம். சரி, நமக்கு உணவைக் கொடுப்பது யார்? உடலை வளர்ப்பது யார்? நீர்நிலைகள்தானே. அவை இல்லாவிட்டால் சூனியமாகிபோவோம். இன்றும் உயிரோடு இருக்கும் நமது பாட்டன், பூட்டன்கள்போலத்தான் இந்த நீர் நிலைகள் எல்லாம்.
ஆம், ஏரிகள், குளங்களுக்கும் உயிர் உண்டு. இது அறிவியல்பூர்வமான உண்மை. மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஏரி, குளங்களை அப்படிதான் வரையறுத்துள்ளது. ஏரிகள், குளங்கள் உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சியோடு ஒப்பிடப்படுகின்றன. அவை ஓர் உயிரினத்தைப் போல புவி யியல்ரீதியாக நிலப் பரப்புகளில் ஏற்படும் இயற்கை மாற்றங்களால் அல்லது மனிதனால் பிறக்கின்றன. காலப் போக்கில் உயிரினங்களைப் போலவே பல்வேறு வடிவங்களில் பரிணாம மாற் றங்களுடனும் பல்லுயிர் பெருக்கத் துடனும் வளர்கின்றன. அவை தங்க ளுக்கான உணவாக ஆறுகளில் அடித்து வரப்படும் வண்டலில் இருந்து வளத்தைப் பெறுகின்றன. அந்த வளத்தில் பாசிகள், நீர்த் தாவரங்கள், நீர் வாழ் உயிரினங்கள், நுண்ணுயிரிகளை வாழ வைக்கின்றன. எனவே, ஏரிகளும் குளங்களும் உயிரினங்களே என்கிறது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை. 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச ஏரிகள் சுற்றுச்சூழல் கமிட்டி ஜெய்ப்பூரில் நடத்திய 12-வது உலக ஏரிகள் மாநாட்டிலும் இது வலியுறுத்தப்பட்டது. இது ‘ஜெய்ப்பூர் பிரகடனம்’ என்றழைக்கப்படுகிறது.
ஆனால், நம் உடலை பராமரிப் பதைப் போல ஏரி, குளங்களைப் பரா மரிக்கிறோமா? நமக்கு தலைவாருவது போல ஏரியை தூர் வார வேண்டாமா? நம் உடலில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்வதைப்போல குளத்தில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டாமா? ஆகாயத் தாமரைகள் ஒன்றிரண்டாக வளரும்போது முளையி லேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டாமா? எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை எதிர் பார்க்கலாமா? அரசாங்கத்தை நடத்து வது அரசியல்வாதிகள்தானே. அவர் களா வந்து நீர் நிலைகளை சரிசெய்யப் போகிறார்கள். நீர் நிலைகளைப் பராமரிக்க ‘நமக்கு நாமே’ திட்டம் உட்பட எவ்வளவோ திட்டங்கள் இருக் கின்றன. மக்களாகிய நாமே... குறிப்பாக, விவசாயிகளே களம் இறங்கலாமே.
தமிழகத்தில் ஒவ்வொரு ஏரியின் எல்லைகளையும் குறைந்தது நான் கைந்து கிராமங்களாவது பங்குபோடு கின்றன. அந்தந்த கிராமங்களில் வேலையை ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு நாளும் சில மணி நேரம் ஒதுக்கி ஒவ் வொன்றாக செய்யலாம். மெதுவாய் குப்பைகளைப் பொறுக்குவோம். அப்புறம் ஆகாயத் தாமரைகளை அகற்று வோம். பெரியதாக எல்லாம் வேண்டாம். சின்ன சின்னதாய் செய்வோம். சிறுக சிறுக சேமிப்போம். சிறு துளி பெருவெள்ளம். சிறியதே அழகு. ஊர் கூடி தேர் இழுப்போம். காந்தியும் ஜே.சி.குமரப்பாவும் வலியுறுத்திய கிராமப் பொருளாதாரத் தத்துவம் இதுதானே.
இப்படி எல்லாம் செய்யாமல்தான் எத்தனையோ ஏரிகளை, குளங்களை, நதிகளை இருக்குமிடம் தெரியாமல் அழித்துவிட்டோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டை அருகே உள்ளது உப்பலோடை. இந்த ஓடை இருந்த இடம் தெரியாமல் காடு மாதிரி மண்டிக் கிடக்கிறது கருவேல மரங்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் இரண்டு நதிகளே எங்கே என்று தெரியவில்லை. திருநெல்வேலியில் இரண்டு முக்கூடல்கள் உண்டு. ஒன்று திருப்புடைமருதூர், இன் னொன்று சிவலப்பேரி முக்கூடல். ஒரு காலத்தில் திருப்புடைமருதூர் முக்கூட லில் கடனா நதி, வராக நதி, தாமிரபரணி மூன்றும் கலந்தன. அதனால்தான், அது முக்கூடல் என்று பெயர் பெற்றது. ஆனால், இப்போது மூன்று நதியில் வராக நதி எங்கே போனது? அது எங்கே இங்கே கலக்கிறது? ஒரு சிலர் கல்லிடைக்குறிச்சி சாலையில் இருக்கும் கடம்பை வழியாக ஓடிவந்து வெள்ளாளங்குடியின் கருணை கால் வாயில் (மஞ்சலாறு அல்லது எலுமிச்சையாறு) கலப்பது வராக நதியாக இருக்கலாம் என்கிறார்கள். இன்னொரு சாரார், ஆழ்வார்குறிச்சியில் கடனா நதியுடன் ராமா நதி கலக்கிறது. அது வராக நதியாக இருக்கலாம் என்கிறார்கள். இதுவரை தெளிவான விடை கிடைக்கவில்லை.
இன்னொரு முக்கூடல் 16-ம் நூற் றாண்டில் எம்நயினார் புலவர் முக்கூடற் பள்ளு பாடிய சீவலப்பேரி முக்கூடல். அந்தக் காலத்தில் ஏரி, குளங்களைப் பராமரித்த பள்ளர்களை சமூகம் ஒதுக்கி வைத்தது. ஆனால், வேளாண்மைக்கு ஆதாரமாகத் திகழ்ந்த பள்ளர்களைப் போற்றவே அழகர் பெருமாள் முக்கூடலுக்கு வந்தார் என்று சொல்லும் அருமையான படைப்பு முக்கூடற் பள்ளு. இங்கே மேற்குத் தொடர்ச்சி மலையின் பஞ்சந்தாங்கி பகுதியில் உற்பத்தியாகி குற்றாலம் அருவியாகக் கொட்டி, 14 அணைக்கட்டுகளை நிரப்பி தென்காசி, கங்கைகொண்டான் வழியாக சிவலப்பேரியில் தாமிரபரணியுடன் கலக்கிறது சிற்றாறு. இன்னொரு பக்கம் கழுகுமலை பகுதியில் இருந்து ராஜாபுதுகுடி, தலையால் நடந்தான் குளம், கங்கைக்கொண்டான் வழியாக கயத்தாறு இங்கே வந்துச் சேர்ந்தது. இவ்வாறாக தாமிரபரணி, சிற்றாறு, கயத்தாறு மூன்றும் சங்கமம் ஆனதால் மூக்கூடல் என்றழைக்கப்படுகிறது. ஆனால், இன்று அந்த கயத்தாறு எங்கே போனது?
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை அருகே உப்பலோடையில் மண்டிக்கிடக்கும் கருவேல மரங்கள். | படங்கள்: எம்.லட்சுமி அருண்
கங்கைக்கொண்டானில் இருந்து புளியம்பட்டி செல்லும் பாதையில் வடகரை கிராமத்தின் வடக்குப் பக்க மாக இருக்கிறது பராக்கிரம பாண்டி யன் குளம். இதன் மூலம் வடகரை, கிழக்கோட்டை, கைலாசபுரம், வேப்பங் குளம், கொடியங்குளம் உள்ளிட்ட கிராமங்கள் பாசனம் பெறுகின்றன. கழுகுமலையில் இருந்து ஓடிவரும் கயத்தாறு பராக்கிரம பாண்டியன் குளத்தில் இணைகிறது.
ஆனால், இந்தக் குளம் தூர் வாரப்படாமல் சீமை கருவேல மரங்களில் ஆக்கிரமிப்பில் தனது முழுக் கொள்ளளவை இழந்துவிட்டது. தண்ணீர் அடுத்தடுத்தக் குளங்களுக்குச் செல்லும் வாய்க்கால்களும் அழிக்கப் பட்டுவிட்டன. கயத்தாற்றின் ஓட்டமே குளத்துடன் நின்றுப்போனது. இதனால் அந்த ஆறு சிவலப்பேரி முக்கூடலில் சங்கமிக்காமல் பராக்கிரம பாண்டியன் குளத்திலேயே மூழ்கிவிட்டது.
இதனால், பெருமழைக் காலங்களில் கயத்தாற்றில் தண்ணீர் பெருகும்போது அது வேறு வழியில்லாமல் பராக்கிரம பாண்டியன் குளத்தில் இருந்து பின் வாங்கி வடகரை, புளியம்பட்டி, கங்கை கொண்டான் கிராமங்களை மூழ் கடிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு பெய்த மழையின்னபோதும் இப்படி தான் கங்கைக்கொண்டான் - புளியம் பட்டி இடையே இருக்கும் தரைப் பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் பாய்ந்தது. இருபக்கமும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு தவித்த மக்களை தீயணைப்புத் துறையினர் வந்து மீட்டனர். என்ன செய்வது? ஆற்றின் பாதையை அழித்த வினைக்கு அனு பவிக்கிறோம்.

Friday 27 November 2015



நொச்சியானது இந்தியா முழுவதும் பரவலாக வளரக்கூடிய ஒரு வெப்ப மண்டலத் தாவரமாகும். வெண்நொச்சி, கருநொச்சி, நீர்நொச்சி எனமூவகை நொச்சிகளை மருத்துவ நூல் உரைக்கிறது. அதிகமாகக் காணப்படுவது வெண்நொச்சியாகும். நீர் நிலைகளுக்கு அருகில் முக்கியமாக ஆற்றங்கரையோரம் நீர்நொச்சி வளர்கிறது. கருநொச்சி அதிகமாகக் காணப்படுவதில்லை. இங்கு வெண்நொச்சி பற்றிக் காணலாம்.
மருத்துவப் பயன்கள்

நொச்சி, நுனா, வேம்பு, பொடுதலை வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு அத்துடன் மிளகு 4, ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு 3 வேளை 3 நாளுக்குக் கொடுக்க மாந்தம் குணமாகும்.

நொச்சியிலை 1 கைப்பிடியளவு, மூக்கிரட்டை வேர், காக்கரட்டானி வேர் வகைக்கு 1/2 கைப்பிடியளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு அத்துடன் சுக்கு 1, மிளகும், சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து 1/2 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு தினமும் 2 வேளையாக, 1 வாரம் குடித்துவர தொடக்க நிலையில் உள்ள இளம் பிள்ளை வாதம் (போலியோ) குணமாகும்.

நொச்சி இலை 2, மிளகு 4, இலவங்கம் 1, சிறிய பூண்டுப் பல் 4 சேர்த்து வாயில் போட்டு மென்று விழுங்கினால் இரைப்பிருமல் (ஆஸ்துமா), மூச்சுத் திணறல் குணமாகும். தொடர்ந்து இப்படிச் செய்ய வேண்டும்.
சாலை ஓரங்களிலும் வேலிகளிலும் காணப்படும் நொச்சி இலைகள் பல நோய்களை விரட்டும் திறன் கொண்டது.
இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது. இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை என முழுத்தாவரமும் பயன்படுபவை.
கிராமப் புறங்களில் தானியங்களை சேமிக்கும் பொழுது நொச்சித் தழைகளை உடன் வைத்து விடுவர்.
மேலும் இது பூச்சிகள் வருவதை தடுக்கும்.
நொச்சி இலையின் மகத்துவங்கள்
மூக்கிலிருந்து நீர் ஒழுகுதல், ஜலதோஷத் தலைவலிக்கு கைகண்ட மருந்து நொச்சி தைலம்.
நொச்சி இலையில் ஒத்தடம் கொடுத்தால் வாயுப்பிடிப்பு, சுளுக்கு நீங்கும்.
நொச்சி இலைகளை ஒரு துணிப்பையில் அடைத்துப் தலையணையாகப் பயன்படுத்தினால் ஜலதோஷம் பறந்துவிடும்.
சீழ்பிடித்து அழுகிச் சொட்டும் புண்ணைக் கூட நொச்சி தைலத்தால் குணப்படுத்தலாம்.
தீராத வாதநோய் வலிப்பு குணமாக நொச்சி இலையுடன் பூண்டு, ரோஜா மொட்டு அல்லது காசினி விதைப்பூ சேர்த்த அரிசிக்கஞ்சியை குடிக்கலாம்.
இந்த இலைகளை நீரிலிட்டு காய்த்து குளித்து வர கீல் வாதம் மறையும்.
இந்த நொச்சி பூவின் சாறு அரை ஸ்பூன் எடுத்து, சம அளவு தேன் கலந்து உண்ண காய்ச்சல் குணமாகும்.
நொச்சி துவையல்
முதலில் வாணலியில் சிறிது எண்ணை விட்டு கடுகு போட்டு நொச்சி இலையை லேசாக வறுக்கவும்.
பிறகு இதனுடன் வெற்றிலை மிளகு மற்றும் மிளகாய் செடியின் இலையை அரைத்தால், நொச்சி இலை துவையல் ரெடி.
பயன்கள்
இந்த துவையலை தினமும் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குணமடையும்.
இதை முதுகில் பூசிக்கொண்டால், முதுகு வலி பறந்துவிடும்.
மேலும் சுவாஸ கோளாருகள் நீங்கி நல்ல அரோக்கியத்துடன் இருக்கலாம்.
நொச்சி கஷாயம்
நொச்சி இலை போட்டு ஊற வைத்த தண்ணீரைச் வாணலியல் வைத்து சிறிது மிளகு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்தால் நொச்சி கஷாயம் ரெடி.
பயன்கள்
இந்த கஷாயம் மலேரியா நோயை விரட்டும் சக்தி வாய்ந்தது.

நாக்குப்பூச்சி வாத நோய்கள் மற்றும் வயிற்றுவலி நீங்கும்.!!!