Wednesday, 30 September 2015

பொலிவிந்து வரும் நீலப்பந்து

பால்வெளியிலே ஒரு நீலப்பந்து
கண்கொள்ளா கவின் கொஞ்சும்
உயிர் கோளம் நம் பூமிப்பந்து

பல காந்த துகள் ஒன்றோடு ஓன்று சேர்ந்து பின்னர் மிகப்பெரிய அளவில் உண்டான பெரிய துகள் மற்றொன்று துகளில்  மோதி நெருப்பு கோளத்திலிருந்து ஒரு சிறிய துகள் சிதறி வந்த ஒரு பகுதி உருண்டை வடிவம் பெற்று தானும் சுழன்றது .நெருப்பு கோளமாக இருந்த அது காலபோக்கில் குளிர்ந்து நீரும் நிலமும் தோன்றின.உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற உயிர்க்கோளமாக உருவெடுக்க சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலானது.
 நமது பூமியானது அதன் வடிவமைப்பு மற்றும் வாழ்வமைப்புகளில் மற்ற கோள்களை விட தனித்துவம் வாய்ந்த தன்மை பெற்றுள்ளது. சூரியனுக்கு மிக அருகில் இல்லாமலும், மிக தொலைவில் இல்லாமலும் நடுவில் அமைந்து உயிரின்ஙகள் வாழ ஏற்ற துவாக உள்ள ஒரு வட்டப்பந்து தான் நமது பூமி
     மனிதன், பூமித்தாய் பல மில்லியன் ஆண்டு தவமிருந்து பெற்றெடுத்த பொக்கிஷம் ஆனால் அந்த தவ புதல்வர்களே அந்த தாய்க்கு எதிராக அவளை கொலை செய்ய துணிந்த்துதான் அவளுடைய துர்பாக்கியம். எனினும் அவள் பொறுமையாய் அனைத்தயும் தாங்கி கொண்டாள். ஆனால் அவளுடைய மற்ற குழநதைகளுக்கும் மனிதன் அழிவை ஏற்படுத்தியது அவளை சிறு முகச்சுழிப்பிற்கு ஆளாக்கியது. அவளுடைய சிறு முகச்சுழிப்பு இந்தியாவில் சுனாமியாய் அமெரிக்காவில் சூறாவளியாய் சீனாவில் பூகம்பமாய் வெளிப்பட்டது.
     உலகம் தோன்றியதை 24 மணி நேர கடிகாரத்தின் மூலம் வெளிப்படுத்தினால் அது பின்வருமாறு அமையும். அதில் முதலில் 4 வது மணி நேரத்தில்  தான் உயிரினமே தோன்றியது. மனிதனோ 23 வது மணி நேரம் 58 வது நிமிடம் 43 வது மணித்துளியில்தான் தோன்றினான். கடைக்குட்டியாய் பெற்ற மணிச்செல்வம் தனக்கு முன் பிறந்த தன் சகோதர உயிரின்ங்களையும் தான் பெற்ற தாயையும் அழிக்க முயற்சிப்பது என்ன ஒரு கொடுமை.

தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு
சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டென்பான்   
சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்டோன் 

என்றார் பாரதிதாசன். ஆனால் இன்று மனிதனோ உள்ளமே இல்லாமல் தன் நலத்தை மட்டுமெ எண்ணி வாழ்ந்துவருகிறான்..

      முதன் முதலில் நீரில் நிற்பன ,ஊர்வன ,பறப்பன   ,நடப்பன மனிதன் என பலவளர்ச்சி நிலைகளை பெற்று உயிர்க்கோளமாக பெயர் பெற்றது .உயிர்க்கோளதின் உயிர் நாடியாக வீட்டிறிருப்பது மனிதன் தான் மனிதனே உயிர்க்கோளதின் மையம் என அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றன அத்தகைய அளவற்ற சுற்றுச் சூழலைப்பற்றி பார்போம். 

சுற்றுசூழல்
     நம்மை சுற்றி இயற்கையால் உருவாக்கப்பட்ட உயிரினங்கள் வாழக்குடிய ஒரு நிலையே சுற்றுசூழல் எனப்படும். ஒவ்வொரு உயிரினமும் சுற்று சுழலை பாதிக்காத வண்ணம் தன்னை மேம்படுத்தி கொள்கிறது. எடுத்துக்காட்டாக மண்புழு தன்னால் இயன்ற அளவு உணவை இந்த சுற்று சூழலில் இருந்து எடுத்துகொண்டு பின் தன் எச்சத்தை மண்ணுக்கு உரமாக்குகின்றது. மனிதனை தவிர அனைத்து உயிரினமும் எதை இந்த பூமியிலிந்து எடுத்து கொண்டதோ அதை மீண்டும் இந்த பூமிக்கு அளித்து சுற்று சூழல் சமநிலையை  உண்டாக்குகிறது.
ஆனால் நாம் சுற்று சுழலில் இருந்து எடுத்துகொண்டது மட்டுமல்லாமல் மேலும் ஈன்ற பூமியை பாழ்படுத்துகின்றோம். மேலும் நாம் எவ்வாறெல்லாம் இந்த பூமியை எவ்வாறு பாழ்படுத்துகின்றோம் என்று வகைப்படுத்தியுள்ளோமே தவிர  அதனை சரி செய்ய முயலாமல் மேலும் மேலும் அந்த வகைப்பாடை மட்டுமே அதிகரித்து வருகின்றோம்..

பூமியை பாழ்படுத்தும் வகைகள்:
1.நீர் மாசுபாடு
2.நில மாசுபாடு
3.காற்று மாசுபாடு
4.ஒலி மாசுபாடு
5.உணவு மாசுபாடு
மேற்கணட மாசுபாடுகளை பற்றி நீங்கள் நன்றாகவே     அறிவீர்கள். நான் அதனை விளக்கப்போவதில்லை. நாம் மாசுபாடுகளை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோமே தவிர அதனை சரிசெய்ய முயலிவில்லை. ஆனால் நமக்கு அதனை சரிசெய்ய போதிய அனுபவமும் அறிவும் உள்ளது.

     நாம் நம்மை அறியாமலே இப்பூவுலகை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகின்றோம். இதற்கு நம் அறியாமையே காரணம் இதற்கு ஒரே தீர்வு நாம் எவ்வாறு இந்த பூமியை அழிக்கின்றோம் என்று பட்டி தொட்டி அனைத்தும் விழிப்புணர்வு பிரசாரம் செய்வதும், மேலும் ஒளிப்படங்களாக எடுத்து அனைத்து மக்களுக்கும் சென்றடையுமாறு செய்யவேண்டும்.இதற்கு ஊடகங்களை சரியாக பயன்படுத்தி கொள்ளலாம். வளர்ச்சி என்பது தானும் வளர்வது தன்னை சுற்றி இருப்பதும் வளர்வது. ஆனால் இன்றோ தன்னை சுற்றி அழித்து தான் மட்டும் வளர்ந்து வருகின்றான். செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைகோளை அனுப்புவது பற்றியும் அதில் தண்ணீர் இருபதற்கான சாத்திய கூறுகளை ஆராய்வதை பெருமையாக கருதுக்கின்றோம். ஆனால் இருப்பதை அழித்துவிட்டு புதிதாய் ஒன்றை தேடுவது ஏன்?

பசும்புற்களால் தொட்டில் அமைத்து
வெண்பூக்களால் மெத்தை செய்து
சில் வண்டுகள் தாலாட்ட பாட
போற்றி வளர்த்தால் பூமித்தாய்
இவன் தான் தன் தவப்புதல்வன் என்று
தகுந்தன தப்பிழைக்கும் என்ற விதி மாற்றி
தான் மட்டுமே பிழைக்க நினைத்தது ஏனோ?
சிந்திப்பாய் மானிடா…………………….

      சூழ்நிலைக்கும் நமது சூழலுக்கும் இடையில் காணப்படுவது சுற்றுச்சூழல் நாம் சீரோடு வாழ்ந்து வருவதை சீரழிவுக்கு காரணம் நெகிழி அரக்கன்  தான் மகிழ்ச்சியோடு வாழ்ந்த இந்த பூமியில் மாசு வந்து அடைந்தது நமது அறியாமையே.மாசு இல்லாமல் மருசுழற்சியோடு வாழ்வதே மகிழ்ச்சியான வாழ்க்கை

காங்கோ நாட்டு கிராமம் :             இருண்ட கண்டம் என்று அழைக்கப்படும் ஆப்ரிக்காவில் காங்கோ நாட்டு கிராமம் ஒன்றில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை பார்த்ததும் மனதில் ஒரு மகிழ்ச்சி. இந்த ஆப்ரிக்கா நாடுகளில் அதிகம் 75% காடுகள் மீதம் 25% மக்கள் வசிக்கும் நிலப்பரப்பு இந்த குளுர்ச்சியான பகுதியில் வீட்டுக்கு ஒருமரம் வளர்பது அந்த நாட்டின் உறுதிமொழி ஆனால் அங்கு மரங்களை சுற்றி  மிக எளிமையாக வீடுகள் இருந்தாலும் அவர்கள் இயற்கைக்கு அளித்துள்ள முக்கியத்துவம் பாராட்டப்பட வேண்டும். அனைத்து வீடுகளுக்கு முன்பும் நிழல் தரும் மரம். மரத்தடியில் இளைப்பாரும் குடும்பம். மாதம் மும்மாரி பெய்யாமல் விடுமா? என்ன? கண்ணிற்கெட்டிய தூரம் பசுமை.ஆப்ரிக்காவின் டாக்டர். வாங்கரி மாத்தாய் நோபல் பரிசு வாங்குவதற்கு மரமும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையில்லை. ஆனால் அதே ஆப்ரிக்காவில் சோமாலியா#, எத்தியோப்பியா* போன்ற நாடுகளில் மரத்தை அதிகம் வெட்டியதின் காரணமாக பஞ்சமும் பட்டினிச் சாவும் நடைபெறுவதும் அங்குதான்.
கேரளா சென்றுவிட்டு வந்தால் எவ்வளவு பசுமையாக உள்ளது அந்த ஊர்கள்என அங்கலாய்க்கும் உதட்டளவு மனிதர்கள் வந்த ஒரு வாரத்தில் குப்பை விழுகிறது, ,வேர் வீட்டிற்குள் வந்துவிடும், வீட்டின் அழகு மறைக்கப் படுகிறது, வாங்கிய புது கார் வீட்டிற்குள் வர தடையாக உள்ளது, வீட்டிற்கு நிழல் அடித்துவிடுகிறது என ஏதேனும் ஒரு காரணம் கூறி நன்கு வளர்ந்த மரத்தை வெட்டத் துடிப்பதை நினைத்தால் மகிழ்ச்சி போய்விடுகிறது. என்று மரத்தின் பயனை புரிந்து கொள்வார்களோ? தெரியவில்லை. தென்மேற்கு பருவ மழை துவங்கி 30 நாட்கள் முடிந்தும் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய அளவு மழை கிடைக்கவில்லை. வருடம் மும்மாரி பெய்தாலே அதிகம் என்ற நிலைக்கு வந்துவிட்டோம். தமிழகத்தின் வனப்பரப்பு 17.5% இருக்க வேண்டிய அளவு 33%. சிந்திப்போம், செயல்படுவோம், மழை பெறுவோம் .


வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும்மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015க்காகவே எழுதப்பட்ட என் சொந்தப் படைப்பே.  ஐந்து வகையான போட்டிகளில் வகை-(2) சுற்றுச்சூழல் கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது. இதற்கு முன் இப்படைப்பு எங்கும் வெளியிடப்படவில்லை என்றும் போட்டியின் முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடப்படமாட்டாது என்றும் உறுதியளிக்கிறேன்

இணைப்பு
Sunday, 27 September 2015

வெறும் கை என்பது மூடத்தனம்  விரல்கள் பத்தும் மூலதனம் .............

Friday, 25 September 2015


காதல் வாழ்க்கை (கம்பர் காலம்)
காதலர்களின் அக வாழ்கையை பற்றி பாடும் பொழுது அவர்களின் பெயரை
சொல்லக்கூடாது என்ற நாகரியத்தை இயம்புவது ‘மக்கள் நூதலிய அகனந்தினயும்
சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப் பெற்றார் என்ற நூற்பா .

கம்பன் பற்றிய புகழுரைகள்
கல்வியிற் சிறந்த தமிழ்நாடு –புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு ‘
-பாரதியார்
எண்ணி எண்ணி திட்டம் போட்டு எழுதினானோ எண்ணாமல் எங்கிருந்தோ கொட்டினானோ .
-நாமக்கல் கவிஞர்
பத்தாயிரம் கவிதையை முத்தாகா அள்ளித்தந்த சத்தான கம்பனுக்கு ஈடு இன்னும் வித்தாகவில்லை என்று பாடு
-கண்ணதாசன்
தமிழ் என்னும் அமிழ் கடலின் தரை வரைக்கும் போனவனே
-    வைரமுத்து

கம்பன் காலத்தில் கணினி இருந்திருந்தால்  இன்று உலகில் ஆங்கிலத்திற்கு பதிலாக
தமிழ் தான் என்றும் உலகமொழி .
                                        -உதயகுமார்


புதுக்கோட்டை                                          :பலாபழம்
திருச்சி                                                           : துப்பாக்கி
நாமக்கல்                                                     : முட்டை
சிவகாசி                                                        : வெடிப்பொருள் மற்றும் தீப்பெட்டி
காஞ்சிபுரம்                                                 : பட்டு
திண்டுக்கல்                                               : பூட்டு மற்றும் புகைஇலை
தஞ்சாவூர்                                                   : நெல் ,தலயாட்டி பொம்மை ,தட்டு
கும்போகோணம்                                   :வெற்றிலை
திருப்பூர்                                                      :பனியன்
சேலம்                                                          :மாம்பழம்
மதுரை                                                         : மல்லிகை
திருநெல்வேலி                                       : அல்வா
வேலூர்                                                       :முள் கத்தரிக்கா
தூத்துக்குடி                                               : உப்பு
தர்மபுரி                                                        : பட்டாணி கொண்டக்கடலை வகைகள்
கோவை                                                     : பல்வேறு தொழிற்சாலை
சென்னை                                                   : சினிமா     

Monday, 21 September 2015


டி என் பி ஸி தேர்வுக்கான பயிற்சி...தமிழ் தேர்வு 1


 1. அ என்பதன் வேறு பெயர்

 2. ஆகாரம்
  அகரம்
  அ காராம்

 3. தமிழ் தாய் வாழ்த்து எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது

 4. மனோன்மணி
  ஆனந்தமடம்
  முவ வரலாறு

 5. அசனி என்பதன் பொருள்

 6. இடி
  காற்று
  புயல்

 7. விளி என்பதன் பொருள்

 8. காற்று
  உயிர்
  இறப்பு

 9. தேம்பாவணியில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை

 10. மூன்று
  நான்கு
  ஆறு

 11. தேம்பாவணி__________பாடல்களை கொண்டது

 12. 3516
  3651
  3615

 13. சிரம் என்பதன் பொருள்

 14. தலை
  காதல்
  முக்கியம்

 15. ஓதை என்பதன் பொருள்

 16. காசு
  பணம்
  ஓசை

 17. முடி வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக

 18. முடித்த
  முடித்து
  முடித்தவன்

 19. காம்பு- பெயர்சொல் வகைஅறிக

 20. சினைப்பெயர்
  பொருட்பெயர்
  பண்புபெயர்

Friday, 18 September 2015


இந்தியாவில் உள்ள முக்கிய ஏரிகள்
 • v  புழல் ஏரி           - திருவள்ளூர் (சென்னை)
 • v  பூண்டி              - திருவள்ளூர் (சென்னை)
 • v  வாழ் பாறை       - கோயம்புத்தூர்
 • v  காவேரி பாக்கம்   - வேலூர்
 • v  செம்பரம்பாக்கம்   - செங்கல்பட்டு (காஞ்சிபுரம்)
 • v  பழவேற்காடு      - தமிழ் நாடு ,ஆந்திரா
 • v  வீராணம்          - கடலூர்
 • v  பெருஞ்சாணி      - கன்னியாகுமாரி
 • v  பேச்சிப்பாறை      -  கன்னியாகுமாரி
 • v  ஹூ சைன் சாகர்  – ஆந்திரா
 • v  சில்கா              - ஒரிசா
 • v  லோக் டாக்        - மணிப்பூர்
 • v  சாம்பார்            - ராஜஸ் தான்
 • v  தால்               - ஜம்மு காஸ்மீர்
 • v  ஊலார்            - ஜம்மு காஸ்மீர் 
Thursday, 17 September 2015

பூமியப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்
v  பூமி சூரியனிலிருந்து 3 வது கோள் ஆகும்
v   பூமியில் தான் பால்லாயிரம் உயிர்கள் வாழ்கின்றன
v  புவி சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது
v  பூமியின் வயது 460 கோடி வருடங்கள்
v  பூமியின் நிலப்பரப்பு -29 % நீர் -71%
v  பூமியின் மொத்த பரப்பளவு -509.7 மில்லியன் சதுர கி .மீட்டர்
v  மேற்பரப்பில் காணப்படும் முக்கிய தனிமம் ஆக்சிஜன் – 46.6%
v  புவியின் சராசரியின் வெப்பநிலை -14 டிகிரி செல்சியஸ்
v  சூரிய கதிர் வீதி தளத்திலிருந்து பூமி அச்சின் சாய்வு -23 ½  டிகிரி
v  சூரியனை சுற்றும் வேகம் -29.8 கி.மீ /விநாடி
v  சூரியனிடமிருந்து புவியின் சராசரி தூரம் -150 மில்லியன் கி.மீ
v  சூரியனிடமிருந்து புவியின் அதிகபட்ச  தூரம் – 152  மில்லியன் கி.மீ
v  சூரியனிடமிருந்து புவியின் குறைந்தபட்ச  தூரம் – 147  மில்லியன் கி.மீ
v  பூமியின் அப் ஹீலியன்  தூரம்  நாள் ஜூலை 2  மற்றும்  ஜூலை 5  க்கு இடையில்
v   நிலநடுக்கோட்டு சுற்றளவு -40,067 கி.மீ
v  பூமியின் துரவ பகுதி  சுற்றளவு -40,000 கி.மீ
v  பூமியின் சமநிலை நாட்கள் – மார்ச் 21, செப்டம்பர் 23
v  பூமியின் மையபகுதி – திட உள்ளகம்
v  திட உள்ளகத்தை சுற்றி புற கூடு அமைந்துருக்கும்
v  பூமியின் கவச போர்வை வளிமண்டலம்
v  வளிமண்டல அடுக்குகள்
-    டிரபோஸ் பியர்
-    ஸ்ட்ர டோஸ்பியர்
-    மீசோஸ் பியர்
-    அயனோஸ் பியர்

v  வானிலை மாறுபாடுகள் நிகழும் அடுக்கு : டிரபோஸ் பியர்
v  டிரபோஸ் பியர் வெப்பச்சாய்வு – 6.4 டிகிரி  செல்சியஸ் / கி.மீ
v  டிரபோஸ் பியரின்  தடிமன் நிலநடுக்கோட்டில் 16  கி.மீ , துர்வத்தில் 8 கி.மீ
v  ஸ்ட்ர டோஸ்பியர் டிரபோஸ் பியரின் முடிவிலிருந்து 50 கி.மீ வரை பரவி உள்ளது
v  ஸ்ட்ர டோஸ்பியர் விமானங்கள் பறப்பதற்கு ஏற்ற வேப்பச்சீர் அடுக்கு
v  ஸ்ட்ர டோஸ்பியரில் ஓசோன் படலம் அமைந்துள்ளது
v  வளிமண்டல அடுக்குகளிலேயே குளிற்சியானது  மீசோஸ் பியர்
v  அயனோஸ் பியர் தகவல் தொடர்பு பர்மாற்றதுக்கு  பெரிதும் உதவுகிறது
v  அயனோஸ் பியர் மீசோஸ் பியருக்கு  மேலே சுமார் 600 கி /மீ  வரை நீள்கிறது
v  வளிமண்டலத்தில்  வெளியடுக்கான எக்சோஸ் பியர் 9600 கி /மீ  வரை நீள்கிறது
v  வளிமண்டலத்தில் சுமார் 85 முதல் 400  கி /மீ வரை நீள்வது தெர்மோஸ் பியர்
v  எக்சோஸ் பியரின் வெளிப்பகுதி மேக்னட்டோஸ் பியர்
v  2009 ஆம்  ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் நாள் வரை வைர மோதிர சூர்யகிரகனம் எற்பட்டது .
v  வைர மோதிர சூர்யகிரகனம் சந்திரன் அபோஜியில் இருக்கும் போது  ஏற்படும்
v  பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வருவதால் ஏற்படுவது சூரியகிரகணம்