டெங்கு... அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சைகள், தடுப்பு முறைகள்!
மழைக்காலத்தில்
டெங்குக் காய்ச்சல் பரவுவதும், பல உயிர்களைக் காவு வாங்குவதும் வழக்கமான ஒன்றாகவே
ஆகிவிட்டது. ‘டெங்கு’ (Dengue) எனும் வைரஸ்
கிருமியால் ஏற்படும் காய்ச்சல் என்பதால், இதற்கு `டெங்குக் காய்ச்சல்’ என்று பெயர்.
`டெங்கு' என்ற ஸ்பானிய
மொழிச் சொல்லுக்கு, `எலும்பு
முறிவுக் காய்ச்சல்’ என்று
பொருள். அதாவது இந்தக் காய்ச்சலின்போது, எலும்பு
முறிவு ஏற்பட்டதுபோல கடுமையான வலி தோன்றும். அதனால்தான் இப்படி அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் கிருமிகளில் மொத்தம் நான்கு வகைகள் உள்ளன. ஒரு வகை வைரஸால் டெங்கு
உண்டாகி குணமான பின்னர், வாழ்நாளில் திரும்பவும் அதே வைரஸால்
பாதிப்பு இருக்காது. அதற்கான எதிர்ப்புச் சக்தி உடலில் உருவாகி இருக்கும். அதே
நேரத்தில், மற்ற வகை வைரஸ் வகையால் டெங்கு ஏற்படலாம்.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்:-
தலைவலி,கண் பின்புற
வலி, பொதுவான உடல் வலி,தசை வலி, மூட்டு வலி, குமட்டலும்
வாந்தியும் வயிற்றுக்கடுப்பு, தோல் சினைப்பு, அடி முட்டிகளில் பொதுவாகவும், சிலருக்கு
உடல் முழுதுமே அரிப்பு ஏற்படலாம், பசியின்மை, தொண்டைப்புண், பல்
ஈறுகளிலிருந்து குருதி வடிதல், மூக்கிலிருந்து குருதி வடிதல், மாதவிடாய்
மிகைப்பு, சிறுநீரில் குருதி போதல், நிணநீர்க்கணு
வீக்கம் வெள்ளை அணுக்கள் எண்ணிக்கைக் குறைதல்
டெங்கு காய்ச்சல் வந்தால் பின்பற்ற வேண்டியது:-
முதலில் எந்தக் காய்ச்சலாக
இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். சாதாரண காய்ச்சல்தானே என்று
இருக்கக்கூடாது.
காய்ச்சலுடன் தலைவலி, வயிற்றுவலி, வாந்தி, உடல்சோர்வு, கருப்பு
நிறத்தில் மலம் சிக்கல்போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக அரசு மருத்துவமனையை
அணுகுவது நல்லது.
காய்ச்சல் இருக்கும் பொழுது உடலில்
தேவையான தண்ணீர் சத்து இருக்க வேண்டும். ஜூஸ்கள் மற்றும் தண்ணீர் குடித்து உடலில்
நீர்ச்சத்து குறையாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
குழந்தைகள் சோர்வடையாமல் இருக்க 1
வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு நான்கு கிளாஸ் அளவு நீர்ச்சத்தும் 5
வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 5 முதல் 6 டம்ளர் அளவு நீர்ச்சத்தும்
கொடுக்க வேண்டும். இதை மருத்துவரின் அறிவுரையின் பேரில் வழங்க வேண்டும்.
காய்ச்சல் உள்ளவர்கள் தேவையான அளவு
சிறுநீர் கழிவதை உறுதி செய்ய வேண்டும்.
டெங்கு காய்ச்சலைத்
தடுக்கும் முறைகள்:-
வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கொசுக்கடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கொசுவலைகளைப் பயன்படுத்த வேண்டும்.
குழந்தைகள் உறங்கும் பொழுதும் வெளியில் விளையாடசெல்லும் பொழுதும் முழுகால்
சட்டை மற்றும் முழு கைசட்டை அணிய செய்ய வேண்டும்.
மாலை நேரங்களில் முக்கியமாக 4 மணி முதல் 7 மணி வரை வீட்டின்
ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும் அல்லது ஸ்க்ரீனைப் பயன்படுத்தவும்.
மாலை நேரங்களில் நொச்சித் தழை மூலம் மூட்டம் போட்டு அப்புகையை வீட்டில்
பரப்பலாம்.
அருமையான விளக்கம்... நன்றி...
ReplyDelete